மட்டக்களப்பில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய மற்றும் மது போதையில் வாகனம் செலுத்தியவர்களை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் நள்ளிரவில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 12 பேரையும் வெல்லாவெளி பிரதேசத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 3 பேர் உட்பட 15 பேரை நேற்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபரின் கீழ் விசேட பொலிஸ் பிரிவு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 5 பேரையும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 பேர் மற்றும் நீதிமன்ற பிடிவிறந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவர் உட்பட 12 பேரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜயராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இதேவேளை வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் மதுபோதையில் வானம் செலுத்திய 3 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Wednesday, October 10, 2018
மட்டக்களப்பில் 15 பேர் கைது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.