
( க. விஜயரெத்தினம்)
றாணமடு மாலையர்கட்டு கிராமத்தில் காட்டுயானையினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலையர்கட்டு கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை(31.8.2018) அதிகாலை 5.30 மணியளவில் அவரது வீட்டு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது பிரதேசத்தில் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதாக பொதுமக்கள் அல்லோகலப்பட்டு பொதுமக்கள் உயிரை காப்பாற்றுவதற்கு ஓடினார்கள்.குறித்த இளைஞரும் ஓடினான்.எதிரே வந்த நான்கு யானைகளுக்குள் இளைஞர் அகப்பட்டுக்கொண்டான்.இதனால் கோபத்தில் வந்த யானை இளைஞரை அடித்து தூக்கிவீசியது.தலையில் ஏற்பட்ட காயத்தினால் மாலையர்கட்டு கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் லயனிதன் (வயது18) என்பவரே ஸ்தலத்தில் காட்டுயானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
காட்டுயானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களுக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள். பிரதேசத்திற்கு பொறுப்பான வனஜீவராசி திணைக்கள பொறுப்பதிகாரிகள் பொதுமக்களை பாதுகாப்பதில் கவனமெடுக்கத் தவறுகின்றார்கள் என வெல்லாவெளி பிரதேச பொதுமக்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதி கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
தற்போது பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு மத்தியமுகாம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.



No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.