கிளிநொச்சி - கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து, இன்று (29) காலை 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதிக்குப் பின்புறமாக உள்ள குளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற இருவர், வயல் கால்வாயில் இருந்த சடலத்தைக் கண்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கு 20 வயதிருக்கும் என தெரிவித்த பொலிஸார் சடலத்தின் முகப் பகுதியில் காயங்கள் இருப்பதாலும் சடலமானது உள்ளாடைகளுடன் மீட்கப்பட்டுள்ளமையாலும் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, இது தொடர்பில், பொலஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.