மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தைக் கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த, (47 வயது) இரண்டு பிள்ளைகளின் தந்தையான, தம்பிராசா குணராசா என்பவராவார்.
நேற்று (29) காலை, மாட்டுப் பட்டியடிக்குச் சென்ற வேளையில், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காத்தான்குடி வடக்கு, திடீர் மரண விசாரணைஅதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வெல்லாவெளி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Post Top Ad
Thursday, August 30, 2018
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.