மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை பிள்ளையாரடி எனுமிடத்தில் புதன்கிழமை 29.08.2018 இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் இருவர் அதிவேகத்துடன் முன்னால் சென்றுகொண்டிருந்த பேரூந்தை மற்றொரு பேரூந்து முந்திச் செல்ல முற்பட்;டபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கில் சுழன்றடித்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களும் படுகாயமடைந்ததோடு மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் பற்றி மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.