கொழும்பு அத்துருகிரிய பிரதேசத்தில் சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு, தப்பிச் சென்று வியலுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தலைமறைவாக இருந்த பௌத்த பிக்கு ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வல்லுறவு சம்பவத்தை அடுத்து அத்துருகிரிய விகாரையில் வசித்து வந்த இந்த பிக்கு காணாமல் போயுள்ளார்.
இது குறித்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு சந்தேக நபர் குறித்து அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சந்தேக நபர் தலைமறைவாக இருக்கும் இடம் பற்றிய தகவல், பதுளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எரிக் ரோஹித்தவுக்கு கிடைத்துள்ளளது.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரான பிக்குவை கைதுசெய்துள்ளனர்.
தப்பிச் சென்றிருந்த இந்த சந்தேக நபர் வியலுவ விகாரையில் தங்கியிருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பிக்கு பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Top Ad
Friday, August 24, 2018
சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.