மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுநகர் , திமிலைத்தீவு , சேற்றுக்குடா , வலையிறவு , வீச்சுக்கல்முனை ஆகிய ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பானது தமது கிராம சேவை பிரிவுகளில் சமூக பணிகளாக பல வாழ்வாதார உதவிகள் , பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகள் மற்றும் விளையாட்டு துறைகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் விதத்தில் நிதி உதவிகள் வழங்கி சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது .
இதன் கீழ் தமது இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பின் ஒரு வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஓசானம் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான மதிய நேர உணவுகள் மற்றும் அவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கி ஒருவருட நிகழ்வு கொண்டாடப்பட்டது .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.