Breaking

Post Top Ad

Saturday, April 7, 2018

கல்முனை ஆர்பாட்டத்தில் "பிறைக்கொடியா புலிக்கொடியா" ; இதுதான் சிறுபான்மை இனத்தின் ஒற்றுமை ?

இதுதான் சிறுபான்மை இனத்தின் ஒற்றுமை ?

கல்முனை மாநகர சபை பிரதி மேயரை தங்களுக்கு கிடைக்க விடாமல்   தமிழருக்கு ஏன் வழங்கினாய்  எமது மக்கள் காத்தமுத்து காங்கிரஸின் அடிமைகளா என பிரதியமைச்சர் எச் எம் எம்  ஹரீஸ்    மீது  குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


நேற்று (6)   ஜும்மா தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலின் முன்னால் ஒன்று கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக நற்பிட்டிமுனை பிரதான வீதியை சென்றடைந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின்போது "பிறைக்கொடியா புலிக்கொடியா" என்றவாசகம் பொறிக்கப்பட்ட சுலோக அட்டையையும் ஆர்ப்பாட்க்காரர்கள் ஏந்தியிருந்ததையும் அவதானிக்க முடிந்ததது






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages