இரண்டு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் இன்று 5ஆம் திகதிபொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த அதி சொகுசு வான் வண்டியொன்றில் சுமார் 220 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.இந்த கஞ்சா போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் வண்டி பங்கதெனிய பிரதேசத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, வானிலிருந்து கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.இந்தப் பொருளின் உரிமையாளர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் எனவும், அவரும் வானில் பயணம் செய்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த போதைப் பொருள் வர்த்தகம் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து மன்னார் வழியாக இவ்வாறு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.