Breaking

Post Top Ad

Thursday, April 26, 2018

பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்! ; பிரதிப்மாஸ்டர் முன்னுக்கு பின் முரணான சாட்சிம்!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆறு பேர் மீதான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்றும் இன்று வியாழக்கிழயும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்றது.


இதன்போது பிரதிப்மாஸ்டரின் சாட்சியத்தில் முன்னுக்கு பின்னான முரணான சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்டதன் காரணமாக அவர் மீதான இரண்டாம் கட்ட விசாரணைக்காக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆறு பேரையும்  ஜுன் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் உத்தரவிட்டார்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages