Breaking

Post Top Ad

Thursday, April 26, 2018

விமானத்தை கடத்த முயற்சித்த இலங்கையருக்கு நேர்ந்த கதி...

அவுஸ்திரேலியாவில் விமானம் ஒன்றை கடத்த முயற்சித்த இலங்கையர் ஒருவரது வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மனோத்மார்க்ஸ் என்ற 26 வயதான அவர், கடந்த ஆண்டு ஜுன் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்றை கடத்த முயற்சித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் தம்மிடம் கைக்குண்டு ஒன்று இருப்பதாக அச்சுறுத்தி, விமானத்தை அவர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளார்.

எனினும் அவரிடம் கைக்குண்டு அன்றி, கைப்பேசி வலுவேற்றி ஒன்றே இருப்பதை அறிந்த பயணிகள் சிலர் அவர் மீது பலப்பிரயோகம் செய்து அவரை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

இதனை அடுத்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி, முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages