Breaking

Post Top Ad

Thursday, April 26, 2018

மட்டக்களப்பில் நடைபெற்ற "யூனியன் அஷ்யூரன்ஸ்" விருதினைப் பெற்ற அலுவலர்களை வரவேற்கும் நிகழ்வு

இலங்கை காப்புறுதித் துறையிலும் முதலீட்டுத் துறையிலும் அனுபவம்வாய்ந்த நிறுவனமாகத் திகழும் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வியாபாரத் துறையில் சாதனை படைத்த இலங்கையின் பல பாகங்களைச் சேர்ந்தோருக்கு  கடந்த 2017ஆம் வருட விருது வழங்கப்பட்டது.




இவ் விருது வழங்கல் நிகழ்வு இந்தநேஷியா, யகார்த்தாவில் மிக கோலாகலமாக நடைபெற்றது.

இவ் விருதுதினை மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிராந்திய அலுவலகப் பிரிவில் பணியாற்றும் 09 உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொண்டனர்.

இவ் விருதினைப் பெற்றுக்கொண்ட 09 பேரையும் வரவேற்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந் நிகழ்வில்  'யூனியன் அஷ்யூரன்ஸ்" நிறுவனத்தின் பொது முகாமையாளர் தர்ஷன அமரசிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

 மேலும் இதன்போது, யூனியன் அஷ்யூரன்ஸ்  விற்பனை தலைமை அதிகாரி கே.கோகிலன், கிழக்கு வலய முகாமையாளர் சஞ்சை குருப்பு,  மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பிரதீப் வசந்த், கல்முனைபிராந்திய முகாமையாளர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் புதிய வியாபாரங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.





































No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages