Breaking

Post Top Ad

Thursday, April 26, 2018

மாமனிதர் டி.சிவராமின் நினைவினை முன்னிட்டு கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்த போராட்டமும்

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவினை முன்னிட்டு அவரது படுகொலை தொடர்பான விசாரணையினை வலியுறுத்தியும் வடகிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்து போராட்டமும் நடாத்தப்படவுள்ளது.


எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்து போராட்டமும் நடாத்தப்படவுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்துள்ள இந்த போராட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியாளர் ஒன்றியமும் இணைந்து கொள்கின்றது.

ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனியிடத்தினைக்கொண்டு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை தென் பகுதியில் மட்டுமன்றி சர்வதேசத்திற்கும் கொண்டுசென்ற ஊடக ஜாம்பவனாக திகழ்ந்த நிலையில் பேரினவாதிகளினால் நயவஞ்சகமாக சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராம் படுகொலைசெய்யப்பட்டார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages