Breaking

Post Top Ad

Tuesday, April 24, 2018

நகரசபைப் பிரதேசத்தை டெங்கு அற்ற வலயமாக மாற்ற நகரசபை உறுதி நகர சபைத் தலைவர் ஐ. அப்துல் வாஸித்

டெங்கு ஆட்கொல்லியின் சவாலை ஏற்று ஏறாவூர் நகரசபைப் பிரதேசத்தை டெங்கு அற்ற வலயமாக மாற்ற அந்நகரசபை நிருவாகம் உறுதி பூண்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைத் தலைவர் ஐ. அப்துல் வாஸித் தெரிவித்தார்.

பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக எடுக்கப்பட்டு வரும் துரித நடவடிக்கை தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை 24.04.2018 விளக்கம் தந்தார்.

இதன்போது நகரசபைத் தலைவர் மேலும் தெரிவித்ததாவது, மாவட்டத்திலும்  ஏறாவூர் நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பாரியசவாலாக இருந்து வரும் டெங்கு ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்தி சிறந்த சுற்றப்புறச் சூழலை உருவாக்க நாம் முயற்சி மேற்கொண்டு வருகின்றோம்.

இதற்கமைய ஏறாவூரில் உள்ள பொறுப்ப வாய்ந்த அதிகாரிகளும் பொது அமைப்புக்களும் கலந்தாலோசித்து சில தீர்மானங்களை எட்டியிருக்கின்றோம்.



வாராந்த ஜும்மாத் தொழுகைக்கு முன்னரான சன்மார்க்கப் பிரச்சார நேரத்திலும், இரவு நேரத் தொழுகைக்குப் பின்னரான சன்மார்க்கப் பிரச்சார நேரத்திலும் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான விடயங்களையும் எத்தி வைத்தல்,

ஒவ்வொரு பள்ளிவாயல் நிருவாகமும் தமது நிருவாக எல்லைக்குள் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,

ஆன்மீகப் பள்ளிகளில் கற்கும் மதரஸா மாணவர்களை டெங்குகட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்,

சமூர்த்தி உத்தியோகத்தர், கிராமஉத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர், சன சமூக உத்தியோகத்தர், வட்டார உறுப்பினர் ஆகியோரடங்கிய கிராமிய மட்ட செயற்பாட்டுத் குழுக்களை மீள இயங்கச் செய்தல்.

பாடசாலை நிர்வாகத்துடன் சேர்ந்து பரிசோதனை செய்ய பொருத்தமான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுடன் சிரமதானப் பணிகளை மேற்கொள்ளல்

குடி நீர் பெறும் கிணறுகளுக்கு நுளம்புக் குடம்பிகளை அழிக்கும் மீன்களை இடுதல்,

அயலிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் பாவனையிலுள்ள திண்மக் கழிவகற்றலுக்குப் பயன்படுத்தும் வாகனங்களைப் பெற்று கொத்தணி முறையில் பாரிய அளவிலான சிரமதானப் பணிகளை மேற்கொள்ளல்

மாதாந்தம் ஒவ்வொரு வட்டார வட்டாரமாக புகை விசுறுதல்.

இந்தத் தீர்மானங்கள் நகர சபையின் செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,  பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர், ஏறாவூர் ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் பிரசன்னத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages