ஆழ்கடல் மீன்பிடி படகில் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற 8 இலங்கையர்கள் அந்நாட்டில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய 8 பேரையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்கள் தலா 10 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மினுவங்கொடை பதில் நீதவான் சரல கருணாரத்ன உத்தரவிட்டுள்ளார்
Post Top Ad
Wednesday, April 25, 2018
மீன்பிடி படகில் அவுஸ்திரேலியா சென்ற 8 இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.