குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக சென்றுள்ள ஹட்டன் குடகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான சுப்பையா விக்னேஷ்வரி என்பவரை கடந்த 13 வருட காலமாக பிரிந்துள்ள நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்ட விதிகளை மீறி எனது மகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பாமல் வைத்துள்ளமையை அரசாங்கம் ஆராய்ந்து உரிய தீர்வினை பெற்றுத் தரும்படி தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
2005ஆம் ஆண்டு ஹட்டன் - குடகம பகுதியில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுப்பையாக விக்னேஷ்வரி என்பவர் தனது 23ஆவது வயதில் வறுமை காரணமாக மத்தியகிழக்கு நாடான சவூதி தம்மாம் பிரதேசத்திற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
கம்பளையில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தின் தரகர் ஒருவர் கூட்டிச்சென்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் ஊடாக குறித்த நாட்டுக்கு 2005ஆம் ஆண்டு 8ம் மாதம் 12ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக தொலைபேசித் தகவல் ஒன்று உறவினர்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு பிறகு கடந்த 13 வருட காலமாக மூன்று முறை மாத்திரமே தொலைபேசி அழைப்புகள் உறவினர்களுக்கு கிடைத்துள்ளது.
குறித்த பெண் சவூதி நாட்டுக்கு சென்றதையடுத்து ஒரு வருட காலப்பகுதியில் இவரின் தந்தை சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.